"ரூ.6,000 கோடி நகைக்கடன் தள்ளுபடி... மிகப்பெரிய நெட் வொர்க்" - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
தமிழக கூட்டுறவுத் துறை வார விழா, சென்னை சேப்பாக்கத்தில் கொண்டாடப்பட்டது. விழாவில் கூட்டுறவுத் துறையின் உறுப்பினர்கள் பயன்பெறும் வகையில் வேர்கள் திட்டமும்", "பணியாளர்கள் பயன்பெறும் வகையில் விழுதுகள் திட்டமும்" "மூன்றாம் பாலினத்தர் பயன்பெறும் வகையில் சிறகுகள் திட்டமும்" தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவதற்கு அடிப்படையாக காரணியாக இருப்பது கூட்டுறவுத்துறைதான் என்று பாராட்டினார்.
Next Story