'நந்தா" பட பாணியில் நகைகள் கொள்ளை.. வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை ஏமாற்றி கைவரிசை
- வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம், அக்கறையாகவும், உதவி செய்வது போலவும் பேசி 15 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றிருக்கிறான் ஒரு பலே திருடன்.. எப்படி நடந்தது கொள்ளைச் சம்பவம்?
- நந்தா திரைப்படத்தில், லொடுக்கு பாண்டி கேரக்டரில் நடித்த கருணாஸ், நீதிபதி வீட்டில் திருடப் போவார்.
- மொத்த பொருட்களையும் புரட்டிக் கொண்டு அவர் புறப்படும் போது, சந்தேகப் பட்டு விசாரிக்கும் பெண்களிடமே காபி வாங்கி குடித்துவிட்டு போவார்...
- கிட்டத்தட்ட இதே பாணியில் சென்னையில் அரங்கேறியிருக்கிறது, ஒரு கொள்ளைச் சம்பவம்...
- ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த 80 வயதான ஜெயம் என்ற மூதாட்டி, அமெரிக்காவில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு, அண்மையில் திரும்பியிருக்கிறார்.
- முதல் தளத்தில் மூதாட்டி தனியாக வசிக்கும் நிலையில், தரைத்தளத்தை வாடகைக்கு விட்டுள்ளார்.
- இந்நிலையில், மூதாட்டி வீட்டிற்கு வெளியே நின்றிருந்தபோது, பக்கத்து வீட்டிற்குள் ஒரு நபர் நுழைய முயன்றிருக்கிறார். சந்தேகப்பட்டு அவரை அழைத்து, யார், என்ன என்று கேட்டிருக்கிறார், மூதாட்டி.
- அந்த நபர், தனது பெயர் சீனிவாசன் என்றும் மின் வாரியத்திலிருந்து வருவதாகவும் அறிமுகம் செய்துகொண்டுள்ளார். மேலும், வீடுகளில் உள்ள மின் இணைப்புகளை சரிபார்க்க வந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார்.
- தனது வீட்டில் வந்து முதலில் சரிபார்க்குமாறு அழைத்திருக்கிறார் மூதாட்டி. ஆனாலும், பொங்கல் நாளில் மின் ஊழியர்கள் வேலை பார்ப்பார்களா என மூதாட்டிக்கு சந்தேகம் எழுந்துள்ளது. புகார்கள் அதிகமாக இருப்பதால் இன்றும் பணிக்கு வந்துள்ளதாக, சந்தேகத்தை தீர்த்திருக்கிறார் அந்த நபர்.
- பின்னர், மூதாட்டி வீட்டின் மின் இணைப்புகளை ஆராய்ந்துவிட்டு, மாடியில் மின்கசிவு இருப்பதாக கூறியுள்ளார் அந்த நபர்.
- மின் இணைப்புகள் எல்லாமே கீழேதான் இருக்கிறது, இங்கேயே பார் என கூறிய மூதாட்டியை அலட்சியம் செய்துவிட்டு, விடுவிடுவென மாடி ஏறிய அந்த நபர், அங்கே இருந்த சுவிட்ச் பாக்சுகளை ஆராய்வது போல பாவ்லா செய்துவிட்டு, மீண்டும் கீழே இறங்கி வந்துள்ளார்.
Next Story