முடங்கிய சென்னை - திருச்சி ஹைவே.. வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்.. திணறல் காட்சி
பொங்கல் திருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுப்பவர்களால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், கார்கள் மற்றும் இருச்சக்கர வாகனங்களில் வெளி மாவட்டங்களுக்கு பொதுமக்கள் தொடர்ந்து சென்றவண்ணம் உள்ளனர். இதனால் கிளாம்பாக்கம், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் 5 கிலோ மீட்டர் தூரதித்திற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனை அடுத்து, தாம்பரம் மாநகர காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
Next Story