பெண்ணுக்கு விடாமல் டார்ச்சர்... அசிங்கம் செய்த நாதக நிர்வாகி கைது - சென்னையில் ஷாக்

x

சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியை சேர்ந்த சக்திவேல், நாம் தமிழர் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பாசறை மாநில செயலாளராக இருந்து வருகிறார். இவர், கிண்டி மடுவங்கரையில் சொந்தமாக ஐ.டி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் கடந்த ஆறு மாதங்களாக பணியாற்றும் சென்னையை சேர்ந்த 25 வயது இளம்பெண், குடும்ப அவசர தேவைக்காக சக்திவேலிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு இளம்பெண்ணை சக்திவேல் உல்லாசத்திற்கு அழைத்து, அவர் வர மறுக்கவே, தான் கொடுத்த இரண்டு லட்சத்தை உடனே தர வேண்டும் எனக்கூறி சக்திவேல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இளம்பெண், கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது நிறுவனத்தில் பணியாற்றும் மேலும் சில பெண்களிடம் இச்சையை தூண்டும் வகையில் சக்திவேல் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேலும் 2 பெண்கள் புகார் அளித்த நிலையில், சக்திவேலின் செல்போன் மற்றும் லேப்டாப்பை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்