முன்கூட்டியே போலீஸ் எடுத்த முடிவு.. பரபரக்கும் சென்னை மெரினா

x

காணும் பொங்கலை ஒட்டி சென்னை மெரினா கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. காணும் பொங்கல் அன்று மெரினா, பெசன்ட் நகர் மற்றும் பாலவாக்கம் கடற்கரைகளுக்கு பல லட்சம் பேர் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் 17 ஆயிரத்து 500 போலீசார் காணும் பொங்கலை ஒட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மெரினா கடல் நீரில் காணும் பொங்கலின் போது பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு வேலிகள் அமைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்