ஒரே இடத்தில் சிக்கிய லட்சங்கள்.. ஷாக்கான போலீஸ்

x

சென்னையில், வாகன தணிக்கையின்போது, அடுத்தடுத்து சிக்கிய கணக்கில் வராத 25 லட்சம் ரூபாய் வருமானவரித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை பிராட்வே கடற்கரை சாலையில், போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஷாருக் ராஜா என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கி கணக்கில் ஏடிஎம்மில் போட சென்றதாக கூறியுள்ளார். இதேபோன்று, சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்ற நபரை பிடித்து, சோதனை செய்தபோது, 15 லட்சம் ரூபாயை பையில் வைத்திருந்த‌து தெரியவந்த‌து. விசாரணையில், சிதம்பரத்தை சேர்ந்த ஈஷாக் தீன் என்றும், தனது முதலாளி பணம் கொடுத்து, சென்னையில் அவரது மாமியாரிடம் கொடுக்க அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாத‌தால், பிடிபட்ட பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே இடத்தில் அடுத்தடுத்து 25 லட்சம் ரூபாய் பணம் சிக்கியதால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்