நியூ இயர் சந்தோசம் முடிவதற்குள்... இறங்கிய பேரிடி... வீட்டை திறந்ததும் ஷாக்கில் உறைந்த தொழிலதிபர்
சென்னை நுங்கம்பாக்கம் லேக் வியூ அவென்யூ பகுதியில்
வசிக்கும் அபுபக்கர் என்ற தொழிலதிபர் குடும்பத்துடன்
புத்தாண்டு விடுமுறைக்கு கீழக்கரைக்கு சென்ற பின்
இன்று காலை திரும்பினர். வீட்டிற்கு வந்து பார்த்த போது,
கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. வீட்டில் இருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க, வைர நகைகள், விலை உயர்ந்த வாட்ச் மற்றும் பணம் கொள்ளை போய் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் ஆய்வு நடத்தப்படுகிறது. கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகளை பதிவு செய்துள்ளனர்.
Next Story