Full போதையில் பேண்டை கழற்றி லெக்கின்ஸை மாட்டி..போலீஸ் வீட்டிலேயே திருட்டு | Chennai

x

திருவல்லிக்கேனியில், ஜெயஸ்ரீ உட்பட 3 பெண் ஆயுதப்படை காவலர்கள் வாடகை வீட்டில் தங்கியுள்ளனர். கடந்த 2 ஆம் தேதி வீட்டை பூட்டிவிட்டு, சாவியை குளியலறை மீது மறைத்து வைத்துவிட்டு அனைவரும் பணிக்கு சென்றுள்ளனர். அடுத்த நாள் பணி முடிந்து வந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள பொருட்கள் சிதறியிருந்த‌தோடு, 10 ஆயிரம் ரூபாய் மற்றும், உண்டியல் பணம் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்த‌தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். புகார் அடிப்படையில், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த போலீசார், எழில் நகரை சேர்ந்த விஜய் என்பவரை கைது செய்தனர். பத்துக்கும் மேற்பட்ட திருட்டு வழக்கில் தொடர்புடைய விஐய், சாவியை வீட்டிலேயே மறைத்து வைத்துவிட்டு செல்வோரின் வீடுகளை குறிவைத்து திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளது தெரிய வந்த‌து. காவலர் வீட்டுக்குள் சென்றபோது, மதுபோதையில், பேண்ட் அழுக்காக இருந்த‌தால் கழட்டிவிட்டு, லெக்கின்ஸை அணிந்து சென்றதும் தெரிய வந்துள்ளது. இதே போன்று வேறு எங்கெல்லாம் கைவரிசை காட்டியுள்ளார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்