சென்னையில் கைநிறைய சம்பளம்..குடும்பத்துக்காக மகன் செய்த அதிர்ச்சி செயல் | Chennai

x

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ராஜகுமாரி என்ற ஊரை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவர்களான ஆஷிஷ், விஷ்ணு மற்றும் மெல்பின் ஆகியோரது பெற்றோர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். குடும்பத்தின் வறுமை இவர்களின் எண்ணத்தை மாற்றியதால், சென்னை சென்று கை நிறைய சம்பாதிக்க முடிவு செய்துள்ளனர். இதையடுத்து கைநிறைய பணம் சம்பாதித்து குடும்பத்தை காப்பாற்றுவோம் என துண்டு சீட்டில் எழுதி வைத்த அவர்கள், யாரிடமும் சொல்லாமல் வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளனர். மாணவர்கள் காணாமல் போனது பற்றி பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அவர்கள் சென்ற வழியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், வீட்டிலிருந்து தேனி மாவட்டம் போடி மெட்டு வழியாக போடிக்கு வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்கள் அங்கிருந்து சென்னைக்கு ரயிலில் ஏறி சென்றுள்ளனர். முன்னதாக, அவர்கள் போடியில் உள்ள ஒரு மைபைல் கடையில் செல்போனை சரிபார்க்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. தொடர்ந்து அவர்களது செல்போன் சிக்னலை வைத்து, சென்னையில் இருந்த மாணவர்களை போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்