சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் விமரிசையாக நடைபெற்ற கங்காதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா
16 ஆண்டுகளுக்கு பின், சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. சுமார் 900 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு கடைசியாக 2008-ல் குடமுழுக்கு நடத்தப்பட்டது. இந்நிலையில், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பில் இக்கோயிலில் 36 திருப்பணிகள் செய்யப்பட்டு, அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் இதுவரை இரண்டாயிரத்து 322 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story