பிரபல ஹோட்டலில்... ஒரே ரூமில் பெண்ணுடன்... காலையிலிருந்து மாலை வரை... மறுநாள் நிர்வாணமாக கிடந்த உடல்
பிரபல ஹோட்டலில்... ஒரே ரூமில் பெண்ணுடன்... காலையிலிருந்து மாலை வரை... மறுநாள் நிர்வாணமாக கிடந்த உடல்... சென்னையில் அதிர்ச்சி
#Chennai #ThanthiTv
தனியார் ஹோட்டலின் மேலாளர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் பாபு அண்ணாநகரில் உள்ள தனியார் ஹோட்டலில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். குடும்பத்துடன் வசித்து வரும் சுரேஷ் பாபு இரு தினங்களுக்கு முன் தி.நகரில் உள்ள தனியா விடுதியில் ஒரு பெண்ணுடன் தங்கி இருக்கிறார். இந்த நிலையில் அறையின் கதவு நீண்ட நேரமாகத் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த விடுதியின் உரிமையாளர்கள் மாற்றுச் சாவியைப் பயன்படுத்தி அறையைத் திறந்து பார்த்துள்ளனர்.அப்போது சுரேஷ்பாபு ஆடைகளின்றி உயிரிழந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இருக்கின்றனர். போலீசார் சுரேஷ்பாபுவுடன் தங்கி இருந்த பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர்.அதில் சுரேஷ் பாபு வேலை பார்த்து வந்த ஹோட்டலில் கடந்த 20 நாட்களுக்கு முன் அந்த பெண் வேலைக்குச் சேர்ந்தது தெரியவந்து இருக்கிறது. மேலும் சுரேஷ் பாபு வலுக்கட்டாயமாக அழைத்தன பேரில் தி.நகர் விடுதிக்குச் சென்ற பெண் காலையில் இருந்து மாலை வரை ஒன்றாக இருந்து விட்டுச் சென்றதும் தெரியவந்து இருக்கிறது. சுரேஷ் பாபுவின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் உடல் ஒவ்வாமையினால் உயிரிழந்து இருக்கலாமா என்ற பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.