சென்னை முக்கிய சாலையில் திடீர் பள்ளம்..! மொத்தமாக உள்ளே புதைந்த வாகனம்..! பதற்றத்தில் மக்கள்
சென்னை வளசரவாக்கத்தில் சாலையில் மீண்டும் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் குப்பை அள்ளும் வாகனம் அதில் விழுந்து பாதி புதைந்த சம்பவம் மக்களை பீதியடையச் செய்துள்ளது... சின்ன போரூர் நியூ காலனி பகுதி பிள்ளையார் கோயில் தெருவில் சமீபகாலமாக அவ்வப்போது திடீர் பள்ளம் ஏற்பட்டு வருகிறது. அவை தற்காலிகமாக சீர் செய்யப்பட்ட நிலையில், அப்பகுதியில் சென்ற மாநகராட்சியின் குப்பை அள்ளும் வாகனம் மழை காரணமாக ஏற்பட்ட திடீர் பள்ளத்திற்குள் பாதி புதைந்தது. அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதோடு 3வது முறையாக பள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்லவே அச்சம் தெரிவிக்கின்றனர்... மெட்ரோ வாட்டர் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு மூடப்பட்ட பின்னர் தான் இதுபோன்ற திடீர் பள்ளங்கள் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது...
Next Story