அடுத்தடுத்து மயங்கி விழுந்த அம்மா உணவக ஊழியர்கள்.. அதிர்ச்சியில் சென்னை

x

ராமாபுரத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட பெண் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த உணவகத்தில் கடந்த சில நாட்களாகவே திமுக - அதிமுகவினரிடையே அடிதடி போன்ற பிரச்சனைகள் நிலவி வந்து. இதில் சிலர் பணியிடை நீக்கம் மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் திமுகவினருக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி 50க்கும் மேற்பட்ட அதிமுகவை ஊழியர்கள் அதிகாரிகளை சந்தித்து மனு வழங்கினர். அப்போது, பேச்சுவார்த்தையில் உடன்படாததால் அவர்கள், மண்டல அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வளசரவாக்கம் போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது ஒரு சில பெண்கள் கதறி அழுத்தப்படி,அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். இதனைக் கண்ட காவலர்கள், தண்ணீரை தெளித்து அவர்களை ஆட்டோ மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்