தமிழுக்கு மலேசியாவில் கிடைத்த பெருமை..ஆனால் வெற்றி பெற்றும் மாணவர்கள் வேதனை | Chennai
மலேசியாவில் நடைபெற்ற ஆசிய பசிபிக் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறன் வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலேசியாவில் காது கேளாதோர் வாய் பேச முடியாதோருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் தமிழகத்தை சேர்ந்த 13 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, நான்கு தங்கம், ஏழு வெள்ளி, ஆறு வெண்கல பதக்கங்களை வென்றனர். அவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் வைத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், அரசு சார்பில் அனைத்து உதவிகளும் கிடைத்தாலும், மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையான பயிற்சிகள் தங்களுக்கு கிடைப்பதில்லை என தெரிவித்தனர்.
Next Story