நேர்மையின் பெருமை.. பயணி தவறவிட்ட பை - பத்திரமாக ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்.. போலீசார் நேரில் பாராட்டு

x

சென்னையில் பயணி ஒருவர் தவறவிட்ட பணம், சான்றிதழ்களுடன் கூடிய பையை, ஆட்டோ ஓட்டுநர் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் ஆட்டோவில் ஏறிய பயணி, பையை மறந்து வைத்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஆதார் அட்டை மூலம் பயணி திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர் என கண்டுபிடித்த நிலையில், கல்லூரி மூலம் தொலைபேசி எண்ணை பெற்று, இளைஞரை செல்வம் தொடர்பு கொண்டுள்ளார். இதையடுத்து அந்த பையை பத்திரமாக போலீசாரிடமும் ஒப்படைத்து பாராட்டுக்களை பெற்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்