9 பைக்கை எரித்து போகியை கொண்டாடிய சிறுவர்கள்... சென்னையில் அதிர்ச்சி சம்பவம் | Chennai
சென்னை அயனாவரம் சோலை அம்மன் கோவில் தெருவில், மோசஸ், ஜெகதீஸ்வரன் உள்ளிட்டவர்களின் இருச்சக்கர வாகனங்கள், போகி பண்டிகையின்போது தீவைத்து கொளுத்தப்பட்டிருக்கிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள், உடனடியாக தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றுள்ளனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினரும் விரைந்து வந்து, தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த சம்பவத்தில் 9 இருச்சக்கர வாகனங்கள் முழுவதுமாக எரிந்து நாசமானது. போலீசார் நடத்திய விசாரணையில், தெருமுனையில் நின்று சிகரெட் பிடிப்பதை கண்டித்ததால், பள்ளி செல்லும் மாணவர் உட்பட, 4 சிறுவர்கள் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
Next Story