"என் கணவனை என்கவுண்டர் செய்து விடுவார்கள்.." மனைவி வெளியிட்ட பரபரப்பு வீடியோ | Chennai

x

சென்னையை சேர்ந்த ரவுடி பினுவின் கூட்டாளி கனகராஜை, மதுரையில் போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேட்டை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கனகு என்ற கனகராஜை, சென்னையிலிருந்து சென்ற சிறப்பு காவல் படையினர், மதுரை ஆரப்பாளையத்தில் உள்ள எஸ்.எஸ். டவர் விடுதியில் தங்கியிருந்தபோது துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்தனர். கைது செய்யப்பட்டுள்ள கனகராஜ் மீது எண்ணூர், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற மூன்று கொலை வழக்குகள் மற்றும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இதனிடையே, தனது கணவர் கனகராஜை போலீசார் என்கவுன்ட்டர் செய்து விடுவார்கள் என அச்சம் தெரிவித்து, அவரது மனைவி மேகலா வீடியோ வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்