இறுதி மாமன்ற கூட்டம் - 91 தீர்மானங்கள் நிறைவேற்றம் | Chennai | ThanthiTV

x

ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. அதில், சென்னை கடற்கரை பகுதிகளில் சவாரிக்கு பயன்படுத்தப்படும் குதிரைகளுக்கு மூன்று இடங்களில் தொழுவங்கள் அமைக்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒழுங்கற்ற முறையில் மற்றும் அனுமதி பெறாமல் இண்டெர்நெட் நிறுவனங்களால் நிறுவப்பட்டுள்ள கம்பங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாள் ஒன்றுக்கு 20 கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள, ஐந்து புதிய நாய் இன கட்டுப்பாட்டு மையங்கள் அமைத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தற்காலிக மழலையர் ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆயாக்களுக்கும் மாத ஊதியம் உயர்த்தி வழங்குவது உள்ளிட்ட, இந்த ஆண்டிற்கான இறுதி மாமன்ற கூட்டத்தில் மொத்தமாக 91 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்