மயிலாப்பூர் போக்குவரத்து தீவுக்கு இயக்குனர் பாலச்சந்தர் பெயர் - கெளரவம் | Chennai | Thanthi TV

x

சென்னை லஸ் சாலையில் குறிப்பிட்ட பகுதிக்கு கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என பெயர் சூட்டப்பட உள்ளது. இயக்குநர் சிகரம் என போற்றப்படும் கே.பாலச்சந்தரின் நினைவாக மயிலாப்பூர் காவிரி மருத்துவமனை அருகே ஆயிரம் சதுரடி அளவில் உள்ள இடத்திற்கு கே.பாலசந்தர் பெயரை சூட்ட சென்னை மாநகராட்சி கூட்டத்தில் கடந்த ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சம்பந்தப்பட்ட இடத்திற்கு கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என பெயர் சூட்டப்பட்டு, அதற்கான பெயர் பலகையை வியாழனன்று அமைச்சர் கே.என். நேரு திறந்து வைக்க உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்