குடிக்க பணம் கேட்டு நண்பனை கொன்ற சக நண்பர்கள்..இரண்டாக பிளந்த மண்டை..இது கொடூரத்தின் உச்சம்
பெரம்பூர் மங்களபுரம் சந்திரயோகி சமாதி தெருவை சேர்ந்த 28 வயதாகும் மணிகண்டன், வேலைக்குச் செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். மணிகண்டன், அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், ஐசக் ஜெபக்குமார் ஆகியோர் ஒன்றாக மது அருந்துவது வழக்கம். மணிகண்டன் ஜெய்சங்கரிடம் அடிக்கடி குடிப்பதற்கு பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று மணிகண்டன் ஜெய்சங்கரிடம் பணம் கேட்டபோது, அவர் பணம் இல்லை என கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பின், குடிபோதையில் சாலையில் சென்ற மணிகண்டன், ஜெய்சங்கரின் தந்தை ஆறுமுகத்திடம், ஜெய்சங்கர் பணம் தராவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெய்சங்கர், தனது நண்பர் ஐசக் ஜெபக்குமாருடன் சேர்ந்து, இரும்பு ராடால் மணிகண்டன் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த மணிகண்டன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மணிகண்டனை தாக்கிய ஜெய்சங்கர் மற்றும் ஐசக் ஜெபக்குமார் மீது ஓட்டேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.