"ஜல்லிக்கட்டு போல் இன்னொரு போராட்டம் வெடிக்கும்" - படையாய் திரண்ட மக்கள்

x

"நீலக்கொடி கடற்கரை" திட்டத்திற்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டநிலையில், ஜல்லிக்கட்டு போராட்டம் போல இன்னொரு முறை மெரினாவில் போராட்டம் நடத்த தூண்டாதீர்கள் என கேட்டுக்கொண்டனர். சென்னை மெரினா கடற்கரை ஒட்டி உள்ள பட்டினம்பாக்கம், நொச்சிக்குப்பம் பகுதி மீனவ மக்கள் மெரினா லூப் சாலையில் அமர்ந்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, கடற்கரை மணற்பரப்பில் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஊர் தலைவர் கோசு மணி, நீலக்கொடி கடற்கரை திட்டம் என்ற பெயரில் பட்டினப்பாக்கம் மீனவ மக்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முயற்சி செய்வதாகவும், ஜல்லிக்கட்டு போராட்டம் போல இன்னொறு முறை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த தூண்டாதீர்கள் என கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்