ஆபத்தை தொடப்போகும் செம்பரம்பாக்கம் ஏரி..! கரையோர மக்களுக்கு காத்திருக்கும் அபாயம் | Chennai

x

காலை முதல் கன மழை வெளுத்து வாங்கி வருவதால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடர்ந்து, நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நீர்வரத்து 713 கனஅடியாக இருந்த நிலையில் தற்போது 3 ஆயிரத்து 500 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஏரிக்கு வரும் நீரின் அளவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். கடந்த 2015 ஆம் ஆண்டு 23 அடிவரை செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் தேக்கி வைத்த நிலையில், தற்போது 22 அடியை தொட்டால், உபரி நீர் திறப்பது குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். அடையாறு ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்க கூடிய மக்களுக்கு முறையான வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட பின்னரே, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்