டெண்டர் விவகாரம்..! சென்னை எழிலகத்தில் வியாபாரிகள் இடையே அடிதடி தகராறு... வெளியான பகீர் காட்சிகள்

x

சென்னையில், டெண்டர் விண்ணப்பிக்கும் அலுவலகத்திலேயே தாக்குதல் நடத்தியதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எழிலகத்தில் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் கட்டிடம் இடிப்பு மற்றும் பராமரிப்பு பிரிவில் பழைய கட்டிடங்களை இடிப்பதற்கான டெண்டர் விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு எதிராக இருந்த பிரிட்டிஷ் கால சிறைச்சாலையை இடிப்பதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டது. சுமார் 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான இந்த டெண்டரை எடுக்க,18 ஆயிரம் ரூபாய் டிடி எடுத்து நேரடியாக வந்து விண்ணப்பிக்க தெரிவிக்கப்பட்டிருந்தது . அப்போது ஒப்பந்தம் எடுக்க வந்த நபர்களில் அஜ்மல் என்பவரை சிலர் அலுவலகத்திலேயே மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு டெண்டர் எடுக்க வந்த வியாபாரிகள் ஒன்று கூடி,டெண்டர் விடுவதில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் ஆசாத் என்பவர், தனக்கு டெண்டர் கிடைக்க வேண்டும் என்பதால் ஆட்களை ஏவி மிரட்டி தாக்குதலில் ஈடுபட்டதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்