பகலில் ஹோட்டல் ஓனர்.. இரவில் வெறியாட்டம்.. இன்டர்நேஷனல் அளவில் விற்பனை - சென்னையில் அதிர்ச்சி

x

சென்னையில் கடந்த சில நாட்களாக மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து வந்தது. இந்த நிலையில், மெத்தபெட்டமைன் கடத்தலில் ஈடுபட்டு, அதை விற்பனை செய்து வந்த ஓட்டல் அதிபர்களான ஜெயினுலாப்தின் மற்றும் அவரது சகோதரர் முகமது ரமால் மற்றும் ஷேக் அப்துல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்திலில் ஈடுபட்டு வரும் இவர்கள், மும்பை துறைமுகம் போன்ற பகுதிகளில் இருந்து கப்பல் மூலமாக போதைப்பொருளை கடத்தி வந்துள்ளனர். பின்னர் அதை சென்னையின் முக்கிய பகுதியான பாரிஸ் உள்ளிட்ட இடங்களில் இருந்து கைமாற்றியுள்ளனர். மேலும், மலேசியா , தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சட்டவிரோத கடத்திலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பகலில் ஓட்டல் அதிபர்களாகவும், இரவில் போதைப்பொருள் கடத்தல்காரர்களாவும் செயல்பட்டிருப்பது விசாரணையில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர்களுடன் தொடர்புடைய நபர்கள் பற்றியும், கப்பலில் கடத்தியது பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்