60 வருடங்களாக குடியிருக்கும் மக்களை விரட்டும் அதிகாரிகள்... மக்கள் எடுத்த முடிவால் பரபரப்பு
வேளச்சேரி ஏரியை ஒட்டிய 749 வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு குவிக்கப்பட்ட போலீசார், 100 அடி சாலைக்கு வரவிடாமல் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். ஜெகநாதபுரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாக தெரிவித்துள்ள பொதுமக்கள், இப்போது வந்து ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறுவதா? என்று வேதனை தெரிவித்தனர். சொத்து வரி, குடிநீர் வரி என அனைத்து வரியையும் முறையாக செலுத்தி வருவதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், பெருநிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ளவற்றை அகற்றுவார்களா? என்று கேள்வி எழுப்பினர். ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள் திங்கட்கிழமை வருவதாக தெரிவித்ததால், மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர்.
Next Story