அவகாசம் கேட்ட மக்கள்..! அதிரடி காட்டிய அதிகாரிகள்.. சென்னை காக்கா தோப்பில் பெரும் பரபரப்பு
சென்னை பாரிமுனையில் உள்ள காக்கா தோப்பு பகுதியில் நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியத்திற்கு சொந்தமான இடத்தில் பல ஆண்டுகளாக இருந்து வரும் மக்களை உடனடியாக காலி செய்ய சொல்லி வீடுகளை இடித்து வருகின்றனர் கால அவகாசம் கேட்டு இடிக்க விடாமல் பகுதி மக்கள் காவல்துறையினிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குறைந்தபட்சமாக இரண்டு வார கால அவகாசம் வேண்டும் இந்தப் பகுதியில் வீடு கிடைக்க சிரமமாக இருக்கிறது குறைந்தபட்சம் 10 ஆயிரத்துக்கு மேல் வாடகை இருப்பதால் பொருளாதார ரீதியாக குறைந்த வருமானத்தை கொண்டுள்ள எங்களால் அப்பகுதியில் புதிய வீடு பார்த்து செல்ல முடியவில்லை என தங்களது பிரச்சனையை தெரிவித்தனர்.
மக்கள் பயன்படுத்தக்கூடிய பொது கழிவறை இடிக்கப்பட்டது மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
தங்களது வீடு இடிக்கப்படுகிறது என்பதனால் சிறுமி ஒருவர் தேம்பி அழுத நிலையில் லேசான மயக்கம் ஏற்பட்டது முதல் உதவிக்காக அருகில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைத்தனர்
காவல்துறை அதிகமாக குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி பரபரப்பாக காட்சி அளித்தது