தமிழகத்தை உலுக்கிய 2 குழந்தைகள் மரணம்.. 4 நாளாக போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் பிணவறையில் உடல்
தமிழகத்தை உலுக்கிய 2 குழந்தைகள் மரணம்.. 4 நாளாக போஸ்ட்மார்ட்டம் செய்யாமல் பிணவறையில் உடல் - கண்விழித்த பெற்றோர்.. நாளை மறுநாள் என்னாகுமோ?
சென்னை குன்றத்தூரில் எலி மருந்து நெடியால் இறந்த குழந்தைகளின் உடல்களுக்கு, வரும் 20ஆம் தேதி பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குன்றத்தூரில் வசித்து வரும் தனியார் வங்கி மேலாளர் கிரிதரன், வீட்டில் தெளிக்கப்பட்ட எலி மருந்து நெடியால், அவரது 2 குழந்தைகள் உயிரிழந்தன. இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு போரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிரிதரனும் அவரது மனைவியும் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகளின் உடல்களை அவர்கள் பார்க்க செல்கின்றனர். அங்கு பெற்றோரின் ஒப்புதல் பெற்று, குழந்தைகளின் உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட உள்ளது. வருகிற 20ஆம் தேதி 2 குழந்தைகளுக்கும் பிரேத பரிசோதனை செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.