ஓரினச்சேர்க்கை உல்லாசம்.. பல கனவோடு சொன்ன இடம் சென்ற 3rd Year மாணவன்.. சென்னையில் பகீர்
சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 20 வயது இளைஞர் , தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர், ஓரின சேர்க்கையாளர்களுக்கான செயலி மூலம், திருமுல்லைவாயலைச் சேர்ந்த ராஜா என்பவரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து, அந்த இளைஞரை அண்ணனூர் சக்தி நகரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு வீட்டுக்கு ராஜா அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த சிலர், அந்த இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கி விட்டு, அவருடைய செல்போனில் இருந்து 29 ஆயிரம் ரூபாயை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து இளைஞர் அளித்த புகாரில் திருமுல்லைவாயல் காவல் நிலைய போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இளைஞருடன் இருந்த ராஜாவை போலீசார் தங்கள் பாணியில் விசாரித்தபோது, தனது நண்பர்கள் மூலம் சதித் திட்டம் தீட்டி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து, ராஜாவையும், அவருக்கு உடந்தையாக இருந்த லலித் குமார், ஜெய சூர்யா, கபாலீஸ்வரன், அரவிந்த் ஆகிய 4 பேரையும் அயப்பாக்கம் ஏரிக்கரையில் பதுங்கி இருந்தபோது தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 ஆயிரம் ரூபாய் பணம், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார், 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.