சென்னை தாம்பரத்தில் திடீர் பரபரப்பு - ஜேசிபியோடு வந்து நின்ற அதிகாரிகள்...
தாம்பரம் சண்முகம் சாலை மார்கெட் பகுதிகளில் உள்ள சாலையோர வியாபார கடைகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதால் வியாபாரிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
முன்னறிவிப்பு எதுவும் இன்றி மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் இணைந்து சாலையை ஆக்கிரமித்து வைத்திருந்த கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டதால் வியாபாரிகள் பொக்லைன் இயந்திரத்தை சிறைபிடித்தனர். இருப்பினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது.
Next Story