சேற்றை கழுவச் சென்ற மாணவருக்கு நேர்ந்த கதி.. அதிர்ச்சியில் நண்பர்கள்.. சென்னையில் பரபரப்பு

x
  • தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த பொன்செய்யந்தான் என்ற மாணவர், சென்னையை அடுத்த செம்மஞ்சேரி பகுதியில் தங்கி, அங்குள்ள கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர், நண்பர்களுடன் உணவகத்தில் சாப்பிட்டுவிட்டு, பைக்கில் அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை கடந்து சென்ற கார், சகதியை அடித்ததால், பொன்செய்யந்தான் மீது சேறுபட்டுள்ளது. தன் மீது பட்ட சேற்றை கழுவுவதற்காக, பாண்டிச்சேரி பாட்டை சாலையில் உள்ள குளத்திற்கு சென்றுள்ளார். எதிர்பாராதவிதமாக விதமாக படியில் கால் வைத்த போது பாசி வழுக்கி குளத்தில் விழுந்த பொன்செய்யந்தான், நீரில் மூழ்கி பலியானார். தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டுள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்