சென்னையில் மக்களின் காலணிகளை சுத்தம் செய்யும் பேராசிரியர் - நெகிழ வைக்கும் காரணம்

x

பேராசிரியர் ஒருவர் ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக பொதுமக்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வரும் சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த செல்வகுமார் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பள்ளி ஒன்றை நடத்தி வருகிறார். 80 மாணவர்களுக்கு மதிய உணவுடன், கல்வி வழங்கி வரும் இவர் வாரம் தோறும் பல்வேறு ஊர்களுக்கு சென்று பொது இடங்களில் அமர்ந்து, பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்து அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி நிதி திரட்டுகிறார்... அந்த வகையில் திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வழி அம்மன் கோவில் சன்னதி தெருவில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொது மக்களின் காலணியை சுத்தம் செய்து நிதி திரட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்