பழிக்கு பழி நடந்த சம்பவம்.. நண்பனை வெட்டிக்கொன்ற நண்பன்.. சென்னையில் பரபரப்பு | Chennai

x

சென்னை திருவொற்றியூரில் ஒன்றாக மது குடித்தபோது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் ரத்த காயங்களுடன் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். சடலமாக கிடந்தவர் திருவொற்றியூரைச் சேர்ந்த அஜய் என்பது தெரியவந்தது. ஓராண்டுக்கு முன்பு அஜய் மற்றும் அவரது நண்பனான தினேஷுக்கு இடையே தகராறு ஏற்பட்டதும், அதற்குப் பழி வாங்க தீபாவளி அன்று அஜய் அடியாட்களுடன் தினேஷை தேடி வந்ததும் தெரியவந்துள்ளது. நேற்று முன்தினம் இருவரும் ஒன்றாக மது அருந்தியபோது, தினேஷிடம் "அன்று நீ சிக்கி இருந்தால் உன்னை கொன்றிருப்பேன்" என அஜய் கூறியுள்ளார். இதையடுத்து, அஜய் வைத்திருந்த கத்தியை எடுத்து அவரையே தினேஷ் குத்திக் கொலை செய்தது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட தினேஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story

மேலும் செய்திகள்