"சென்னையில் இனி மழை தேங்கக்கூடாது..?"மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Chennai
சென்னை வண்ணாரப் பேட்டையில்,மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாநகராட்சிக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள ரத்ன சபாபதி சாலையில், ஆண்டுதோறும் மழைக்காலங்களில் மழை நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, ஜிஜி மாத்யூ என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில், விசாரணைக்கு வந்தது. அப்போது வண்ணாரப் பேட்டையில்,மழை நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய, மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 14 ம் தேதி தள்ளி வைத்தனர்.
Next Story