சென்னையில் நடந்த பகீர் சம்பவம்.. `அவன சுட்டு கொல்லுங்க சார்'..கண்ணீர் விட்டு கதறும் மனைவி

x

சென்னை தாம்பரம் சத்தியமூர்த்தி நகரில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வேதமுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார்.தனது பேத்தியைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு வேதமுத்து வீட்டுக்குத் திரும்பி இருக்கிறார்.அப்போது வட மாநில இளைஞர் ஒருவர் அவரது வீட்டின் முன் நின்று அச்சுறுத்துவது போன்று செயல்பட்டு இருக்கிறார். அவரை அதே பகுதியைச் சேர்ந்தவர்களின் உதவியுடன் அப்புறப்படுத்தி இருக்கிறார். அந்த இளைஞர் காலையிலிருந்து இதே போன்று பல வீடுகளில் உள்ள பெண்களை அச்சுறுத்தி வந்ததும் தெரியவந்துள்ளது.இந்த நிலையில் மீண்டும் அந்த இளைஞர் வேதமுத்து வீட்டிற்கு முன்பாக வந்து கற்களை வீசி இருக்கிறார். இதனால் பயந்து போன வேதமுத்து குடும்பத்தினர் கதவுகளைப் பூட்டிக் கொண்டு போலீசாருக்கு உதவி கேட்டு போன் செய்துள்ளனர். ஆனால் ஒருவரும் வரவில்லை என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பூட்டிய வீட்டில் ஏறிக் குதித்த இளைஞர் வீட்டின் பின் புறத்தில் நின்று கொண்டிருந்த வேதமுத்துவின் தலையில் பெரிய கல்லைப் போட்டதில் அவர் படுகாயம் அடைந்து இருக்கிறார்.


Next Story

மேலும் செய்திகள்