சென்னையில் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் டாஸ்மாக் - உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு

x

சென்னை திருவொற்றியூரில் குடியிருப்புக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரிய வழக்கு, தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், ஏற்கனவே கல்வி நிலையங்கள், மத வழிபாட்டுத்தலங்களுக்கு அருகில் டாஸ்மாக் கடைகளை அமைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், குடியிருப்பு பகுதிகளையும் இணைத்து விதிகளை வகுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதுதொடர்பான குழுவில் இடம் பெற்றுள்ளார்கள் விவரங்களை கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, தமிழக டிஜிபி தலைவராகவும் உறுப்பினர்களாக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் மற்றும் உயர் அதிகாரிகள் இடம்பெறும் வகையில் குழுவை மாற்றி அமைத்து, உத்தரவிட்டுள்ளது. ஆறு வாரங்களுக்கும் இக்குழு அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை பிப்ரவரி 20 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்