JUSTIN || 13வது மாடியில் இருந்து குதித்து முதியவர் தற்கொலை
சென்னை போரூரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சிவகுமார் (74) மற்றும் அவரது மனைவி கோதை (70) வயதான தம்பதியினர் இருவரும் மகன்களைப் பிரிந்து தனியாக வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளிநாடுகளில் வேலை செய்து அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகுமார் இன்று காலை தனது அடுக்குமாடி குடியிருப்பின் 13 வது தளத்தின் பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடல் சிதறி துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக அவர் உயிர் பிரிந்தது. இதுக்குறித்து தகவல் அறிந்து வந்த போரூர் போலீசார் இறந்த நிலையில் கிடந்த சிவகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலையா என்று கோணத்தில் போலீசார் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர். முதியவரின் தற்கொலை அடுக்குமாடி குடியிருப்பு வசிப்பாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.