வீடு புகுந்த நாய்கள்... சிதைந்த முகம்... ரத்த வெள்ளத்தில் பலியான முதியவர் - சென்னையில் கொடூரம்

x

சென்னை, அரும்பாக்கம் திருவள்ளுவர் நகரில் வசித்து வந்த சுப்பிரமணி என்ற 81 வயது முதியவர், வயது முதிர்வு காரணமாக வீட்டில் தனியாக வசித்து வந்தார். கடந்த மூன்று தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த முதியவர் சுப்பிரமணியை, நேற்று இரவு வீட்டுக்குள் புகுந்த தெரு நாய்கள் கொடூரமாக கடித்துள்ளன. இதில் அவரின் முகம் முழுவதும்

சிதைந்துள்ளது. கை கால்ககளில் அவரை கடித்து குதறியுள்ளன. நாய்களின் சத்தம் கேட்டு அருகே இருந்த ராணி என்பவர் வீட்டுக்குள் சென்று நாய்களை விரட்டியுள்ளார். அப்போது முதியவர் சுப்பிரமணி

சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரும்பாக்கம் போலீசார், முதியோர் சுப்பிரமணியின் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நாய் கடித்து முதியவர் உயிர் இருந்தாரா அல்லது உடல்நிலை காரணமாக ஏற்கனவே உயிரிழந்து இருந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்