`Critical' - ஆம்புலன்ஸிலேயே பிரசவம்... தாய், சேயை காத்த `ஆண்' மருத்துவ ஊழியர் - குவியும் பாராட்டுக்கள்

x

ஸ்ரீபெரும்புதூரில் 108 ஆம்புலன்ஸிலேயே வடமாநில பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஆண் மருத்துவ ஊழியருக்கு பாராட்டு குவிகிறது. ஜார்க்கண்டைச் சேர்ந்த சுனாராம் - புதனிக்கு ஏற்கனவே மூன்று வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்துள்ளார். இருப்பினும், மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளாமல் இருந்து வந்த நிலையில், திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை மீட்க வந்த 108 ஆம்புலன்ஸிலேயே அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், வடமாநில பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ ஊழியர் மணிகண்டனை பலரும் பாராட்டி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்