சென்னையில் ஸ்பைடர் மேன் - சொன்ன காரணம் தான் ஹைலைட் | Spiderman | Chennai | TN Police | Thanthi TV

x

நள்ளிரவில் ஸ்பைடர் மேன் போல உடையணிந்து மார்க்கெட்டிங் செய்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணாசாலையில் பிரபல உணவகம் அருகே திடீரென ஒரு நபர் ஸ்பைடர் மேன் போல உடையணிந்து தோன்றியதால் பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். இதனால் அங்கு பெரிய அளவிலான கூட்டம் கூடியது. பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மார்க்கெட்டிங் செய்வதற்காக, இது போன்று உடை அணிந்து நடந்து கொண்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் அந்த நபரை எச்சரித்து, இது போன்ற செயலில் ஈடுபடக்கூடாது என எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்