சென்னையை அதிர வைத்த பள்ளி சம்பவத்தில் திடீர் திருப்பமாக வெளியான தகவல் - அதிர்ச்சியில் பெற்றோர்கள்

x

சென்னையை அதிர வைத்த பள்ளி சம்பவத்தில் திடீர் திருப்பமாக வெளியான தகவல் - மாணவிகள் மயக்கத்தின் உண்மை காரணம்? அதிர்ச்சியில் பெற்றோர்கள்

சென்னை தனியார் பள்ளியில் மாணவர்கள் மயங்கி விழுந்ததற்கான காரணம் குறித்து நடத்திய ஆய்வு முடிவில், அதிகாரிகள் கூறியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது குறித்து விவரிக்கிறது, இந்த செய்தி தொகுப்பு..

கடந்த 25ஆம் தேதி, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் ஏற்பட்டதாக கூறப்படும் வாயுக்கசிவு விவகாரமே சென்னையில் இப்போது பேசுபொருளாகி வருகிறது.

இதனிடையே, மயக்கம் அடைந்த பள்ளி மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் கூறியிருந்தது அனைவரையும் நிம்மதி அடைய வைத்திருந்தது.

இருப்பினும், இந்த வாயுக்கசிவு விவகாரம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி நாளுக்குநாள் பரபரப்பை அதிகரித்து வருகிறது.

அந்தவகையில், மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் மேற்கொண்ட 3 நாள் ஆய்வின் முடிவில், நச்சுத்தன்மை வாய்ந்த அம்மோனியா போன்ற எந்த ஒரு வாயுக்கசிவும் பள்ளி வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏற்படவில்லை எனக் கூறப்பட்டிருந்தது.

தனியார் பள்ளி கல்வித்துறை இயக்குனர் முத்து பழனிச்சாமி, மறு உத்தரவு வரும் வரை பள்ளிக்கு விடுமுறை என உத்தரவிட்டிருந்தார்.

இதற்கான காற்று தர மதிப்பு ஆய்வு அறிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கு மாசு கட்டுபாட்டு வாரியம் அளித்திருக்கிறது. இதன் அடிப்படையில், மாணவர்களின் கல்வியை பாதிக்காமல் மீண்டும் பள்ளியை வழக்கம்போல் திறக்க பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இதன் அடிப்படையில், இன்று பள்ளி திறக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இந்த பள்ளிக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான கடிதம் பள்ளிக்கல்வித்துறை மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியவற்றிற்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருவொற்றியூர் போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இங்கு வாயுக்கசிவு ஏற்படுவதற்காக சாத்தியக் கூறுகளே இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, மாணவர்களிடம் செய்த விசாரணையில், சில மாணவர்கள் வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டு வந்ததாகவும், இதற்காக பெப்பர் ஸ்பிரே உள்ளிட்ட மர்மப் பொருட்களை பயன்படுத்தியதாகவும் வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..

தொடர்ந்து, பள்ளி வளாகத்திலும், கட்டிடத்தின் அனைத்து தளங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. லீவு-க்கு ஆசைப்பட்ட சில மாணவர்கள் இதுபோன்ற விஷம செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற நிலையில், இன்றுவரை பலரின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தண்டையார்பேட்டை ஆர்டிஓ மற்றும் மண்டல குழு தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், பள்ளியில் வளரும் முயல்களின் சிறுநீர் மற்றும் எச்சங்களால் ஏதும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கலாம்.. என மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்