கடையில் QR கோட் வச்சிருக்கீங்களா?.. புது வித மோசடி.. உஷார்..
சென்னையில் போன்-பே மூலம் பணம் அனுப்பியதாக மோசடி செய்து, செல்போனை திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை திருவொற்றியூரில் பழைய செல்போன்களை விற்கும் கடை நடத்தி வரும் யோகேஷ் என்பவர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதில் மர்மநபர் ஒருவர் கடையில் இருந்த செல்போனை தேர்வு செய்ததாகவும், ஆறாயிரத்து 300 ரூபாயை போன்-பேயில் அனுப்புவதாக கூறி, கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். பணத்தை அனுப்பியதாக காட்டிவிட்டு செல்போனுடன் மர்மநபர் கிளம்பி விட்டதாகவும், ஆனால் விற்பனை செய்த தொகை தனது வங்கிக்கணக்கில் ஏறவில்லை என்பதை பின்னர் தெரிந்து கொண்டதாகவும் யோகேஷ் புகாரளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, பணமோசடி செய்து செல்போனையும் திருடிச்சென்ற மர்மநபரை தேடி வருகின்றனர்.
Next Story