சென்னையை அதிரவைத்த SBI பேங்க் சம்பவம் - அலறி ஓடவைத்த சைரன்...சிக்கிய வடமாநில இளைஞர்
சென்னையில் எஸ்பிஐ வங்கியில் நடந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து பார்க்கலாம்..விரிவாக..
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே வாலாஜா சாலையில் எஸ்.பி.ஐ வங்கியில் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது..
பிரதான சாலையில் உள்ள முக்கியமான வங்கி என்பதால், இந்த எஸ்பிஐ வங்கியில் எப்போதும் ஆள்நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த நிலையில் தான், வங்கியின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் வங்கி அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாகியது..
முதல் நாள் இரவு வழக்கம் போல், பூட்டி செல்லப்பட்ட வங்கியின் கதவுகளை உடைத்து வங்கி பணத்தைக் கொள்ளையடிக்கும் முயற்சி நடைபெற்று இருந்ததைக் கண்டு வங்கி அதிகாரிகள் திகைத்துப் போயினர்.
பிறகு, வங்கிக்கு வந்த திருவல்லிக்கேணி போலீசார், அங்கிருந்த சிசிடிவிகளை சோதனை செய்ததில், ஒரு இளைஞர் வங்கியின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று லாக்கரையும் உடைக்க முயன்றதும் தெரியவந்தது.
இதனிடையே வங்கிக்குள் சைரன் சத்தம் அடிக்கவே, அந்த நபர் வங்கியை விட்டு ஓட்டம் பிடித்திருக்கிறார்.. வங்கியில் தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உதவிகள் தீவிர விசாரணை செய்து வந்தனர்..
அத்துடன், வங்கியில் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டும் அந்த நபரை போலீசார் வலைவீசித் தேடிவந்தனர். இந்த சூழலில் தான், டீக்கடையில் ஹாயாக காபி குடித்துக் கொண்டிருந்த நபரை அடையாளம் கண்ட போலீசார், அவரை கைது செய்திருக்கின்றனர்.
விசாரணையில், போலீசாரிடம் சிக்கிய அந்த இளைஞர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், அவரால் வாய்ப் பேச இயலாததும் தெரிய வந்திருக்கிறது.. அத்துடன் அந்த இளைஞருக்கு எழுதப்படிக்கவும் தெரியாமல் உள்ளார் எனக் கூறப்படும் சூழலில், அவரிடம் விசாரணை செய்வதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது..