பக்கிங்காம் கால்வாயில் கால் வைத்ததும் அரக்கனாக மாறிய `சீசிங்’ ராஜா - கும்மிருட்டில் தெறித்த தோட்டாக்கள்..நொறுங்கிய மார்பு

x

வேளச்சேரியில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய வழக்கில் கைதான ரவுடி சீசிங் ராஜா போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஆந்திர மாநிலம் ராஜம்பேட்டையில் ரவுடி சீசிங் ராஜாவை, தனிப்படை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர்.

நீலாங்கரை அக்கரை அருகே பக்கிங்காம் கால்வாயில் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக சீசிங் ராஜா கூறியதன் பேரில், அவற்றை பறிமுதல் செய்ய போலீசார் சென்றனர்.

அப்போது அங்கு மறைத்து வைத்திருந்த கள்ளத் துப்பாக்கியை சீசிங் ராஜா எடுத்து போலீசாரை நோக்கி சுட்டதாகவும், 2 குண்டுகள் போலீஸ் வாகனத்தின் மீது பட்ட நிலையில், தற்காப்புக்காக ஆய்வாளர் விமல், துப்பாக்கியால் சுட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சீசிங் ராஜாவின் இடது புற மார்பு மற்றும் மேல் வயிறு பகுதிகளில் குண்டுபாய்ந்து படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, சீசிங் ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்