மரண பயம் காட்டும் வடகிழக்கு பருவமழை..சென்னையை பதம் பார்த்த கனமழை... வானிலை மையம் கொடுத்த வார்னிங்

x

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில்,தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை மாநகர் பகுதிகளில் நான்காவது நாளாக நள்ளிரவில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை, நந்தனம், எழும்பூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் மிதமான மழை பெய்தது.இதேபோல, சென்னையின் புறநகர் பகுதிகளான குரோம்பேட்டை, பல்லாவரம், பெருங்களத்தூர், சேலையூர் உள்ளிட்ட இடங்களில் இரவில் கனமழை பெய்தது. சாலையில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியதால், ஜிஎஸ்டி சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.அடுத்த மூன்று மணி நேரத்திற்குள்ளாக சென்னை உட்பட 19 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து.


Next Story

மேலும் செய்திகள்