சென்னையில் வெளுத்தெடுத்த கனமழை..குளம் போல மாறிய முக்கிய பாலம் - 5 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை
சென்னையில் திடீரென வெளுத்தெடுத்த கனமழை..குளம் போல மாறிய முக்கிய பாலம் - 5 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. தமிழகத்தில் இன்று நீலகிரி, செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது.
அடையாறு, கிண்டி, மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், எழும்பூர், சென்ட்ரல், அண்ணா நகர் ஆகிய பகுதிகளிலும், தாம்பரம், முடிச்சூர், போரூர் மதுரவாயல் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்தது.
சென்னையில் சில இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் அவ்வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் ஊர்ந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையில் மழையுடன் கூடிய குளிர்ந்த காற்று வீசி வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.