சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழை.. - சாலையில் ஆறாக ஓடும் நீர்..
வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது, இதனால் சென்னைக்கு மழை எச்சரிக்கை விடுத்திருந்தது வானிலை ஆய்வு மையம். அதன்படி, வடசென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து பலத்தமழை பெய்து வருகிறது. பழைய வண்ணாரப்பேட்டை தண்டையார்பேட்டை தங்க சாலை, திருவொற்றியூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் வண்ணாரப்பேட்டையில் இருந்து திருவெற்றியூர் செல்லும் நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியது பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.
Next Story