50 இடங்கள்..! 13 வாகனங்கள்..! 2 நாட்களாக தனியார் நிறுவனங்களில் சல்லடை போடும் அதிகாரிகள்..!
- சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 50 இடங்களில், தனியார் உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் கட்டுமான நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
- கிண்டியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தனியார் பைப் உள்ளிட்ட உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
- 13 வாகனங்களில் வந்த 60 அதிகாரிகள், இரண்டு நாட்களாக தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வருமான வரி கணக்கு தாக்கல், அந்நிய முதலீடுகள் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
- இதேபோல், காஞ்சிபுரம் புதுப்பாக்கம் பகுதியில் உள்ள பிரிவுகள் மற்றும் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர்,கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பிரிவுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
- அம்பத்தூர் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் நிறுவனத்திலும்,பூந்தமல்லியை அடுத்த வேலப்பன் சாவடியில் தனியார் கட்டுமான நிறுவனத்திலும் வருமானவரித்துறை சோதனை
- நடைபெறுகிறது. ஆழ்வார்பேட்டை பகுதியில் வசிக்கும் கட்டுமான நிறுவன அதிபர் சிவசுப்பிரமணியன், நிறுவன இயக்குனர் சபீர் யூசுப் உள்ளிட்டோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்பேட்டில் உள்ள மால் ஒன்றில்,தனியார் நிறுவனத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
Next Story