காலையிலேயே பரபரப்பாகிய ரெய்டு.. சென்னையில் தனியார் நிறுவனத்தை ED அதிகாரிகள் அதிரடி சோதனை..
- சென்னையில் தனியார் மின் உற்பத்தி நிறுவனம் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- சைதாப்பேட்டையில் உள்ள OPG Power & Infrastructure நிறுவன கார்ப்பரேட் அலுவலகம், ஆர்.ஏ புரத்தில் உள்ள இந்நிறுவன இயக்குநர் அரவிந்த் குப்தாவின் வீடு, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள கௌஷிக் சோலார் நிறுவன உரிமையாளர் கெளசிக் என்பவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதைத்தவிர கீழ்பாக்கம் பர்னபி சாலை உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. குறிப்பாக OPG Power & Infrastructure மின் உற்பத்தி நிறுவனத்தை மையப்படுத்தி இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிறுவனம், தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்திற்கு , 74 மெகாவாட் மின்சாரம் வழங்க, 15 ஆண்டிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், நிர்ணயித்த அளவைவிட அதிக விலைக்கு தமிழக அரசு மின்சாரம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் மூலம் சட்டவிரோத பண பரிமாற்றம், விதிகளை மீறி அந்நிய முதலீடு ஆகியவை நடந்துள்ளதா என்ற அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
Next Story