சென்னை முழுவதும் திடீர் கரண்ட் கட்... மக்கள் ஆத்திரம் - மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு
சென்னைக்கு முக்கிய ஆதாரமாக மின்சாரம் வழங்கக்கூடிய
மணலி துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவால், மின்சாரம் செல்லக்கூடிய உயர் அழுத்த மின் கோபுர வழித்தடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் தீயணைப்புத் துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டது
இந்தநிலையில், மின்விநியோகம் தடைபட்டதால் சென்னையின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சமடைந்தனர். நீண்ட நேரமாக மின்சாரம் வராததால் ஆத்திரமடைந்த ராயபுரம் சுற்றுவட்டார பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். ஒருசிலர், மின்வாரிய அலுவலகத்திற்குள் சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
Next Story