பொங்கல் சிறப்பு பேருந்து - எப்போது வெளியாகும் அறிவிப்பு? | Pongal Special Bus

x

கடந்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது போல், இந்த ஆண்டும் 20 ஆயிரம் பேருந்துகள்‌ இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரும் 11ம் தேதியில் இருந்து, சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. 14 ஆம் தேதி முதல், 19 ஆம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போன்று, பொங்கல் பண்டிகை முடிந்து விடுமுறைக்குப் பிறகு, சென்னை திரும்பும் மக்களுக்காக கூடுதல் பேருந்துகள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு, தினசரி பேருந்துகளுடன், சென்னையில் இருந்து 4 ஆயிரத்து 706 சிறப்பு பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 8 ஆயிரம் பேருந்துகளும் என, மொத்தமாக 19 ஆயிரத்து 484 பேருந்துகள் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்